செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (16:08 IST)

சைபர் கிரிமினல்களின் 2020 டார்கெட்!! பேங்குல இருக்க பைசா பத்திரம் பாஸு...

2020 ஆம் ஆண்டு இணையவழி பணப்பரிமாற்ற சேவைகளையே சைபர் கிரிமினல் கும்பல்கள் குறிவைத்துள்ளதாக காஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது. 
 
தொழிநுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் ஆண்டிவைரஸ் நிறுவனமான காஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு திகில் கிளப்பியுள்ளார். 
 
அதில் அவர் குறிப்பிட்ட சில முக்கியமானவை பின்வருமாறு, 2020 வரவுள்ளதையடுத்து, நிதித் துறையில் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளின் பாதுகாப்புக் குழுவினர் புதிய சவால்களை எதிர்நோக்கி இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதாவது, 2020-ல் இணையவழி பணப்பரிமாற்ற சேவைகளையே சைபர் கிரிமினல் கும்பல்கள் குறிவைத்துள்ளதாக தெரிகிறது.