வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (08:25 IST)

மோடியின் வாரணாசி தொகுதியில் பயங்கர கலவரம்:ஊரடங்கு உத்தரவு

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சாதுக்கள் சென்ற பேரணியில் பயங்கர கலவரம் வெடித்ததை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 
 
விநாயகர் சிலைகளை கங்கையில் கரைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 21 மற்றும் 23ம் தேதிகளில் சாமியார்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அந்த சம்பவத்தைக் கண்டித்து வாரணாசியில் நேற்று பேரணி நடைபெற்றது.
 
இதில் உள்ளூர் மக்கள், சாதுக்கள் என ஏராளமானோர் திரளாகக் கலந்து கொண்டனர்.  அமைதியாக சென்ற பேரண திடீரென கலவரமாக வெடித்தது. பேரணியில் சென்றவர்கள் அங்கிருந்த கடைகள் மற்றும் காவல்துறை வாகனங்களுக்கு தீவைத்தனர்.
 
இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. கலவரத்தை அடுத்து அங்கு ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.