வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (19:37 IST)

கிரிப்டோகரன்சி மோசடி.. ஏமாந்த 1000க்கும் மேற்பட்ட போலீசார்..!

bitcoin
இமாச்சல பிரதேசத்தில் நடந்த கிரிப்டோ கரன்சி மோசடியில் ஆயிரம் போலீசார் உள்பட லட்சக்கணக்கானோர் ஏமாந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒரு பணம் இழந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் போலீசார் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்,  பணம் ஏமாந்தவர்களிடம் இருந்து புகார்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி  மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த மோசடிகள் பணம் இழந்துள்ளது குறிப்பாக அதில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பணத்தை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran