போலி வீடியோவுக்கு ட்விட்டர் எப்படி காரணமாகும்? - ;போலீஸை குடையும் நீதிமன்றம்!
உத்தரபிரதேசத்தில் போலி வீடியோ ஒன்று ட்விட்டர் மூலமாக பரவியதன் பேரில் ட்விட்டர் மீது போடப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ட்விட்டர் நிறுவனம் ஏற்காமல் இருந்தது சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் போலி வீடியோ ஒன்று ட்விட்டர் வாயிலாக வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து உத்தர பிரதேச போலீஸார் ட்விட்டர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ”ஒரு நபர் போலி வீடியோ பதிவிட்டதற்கு ட்விட்டர் நிறுவனம் எப்படி பொறுப்பாக முடியும்? இதில் ட்விட்டர் நிறுவனத்திற்கு நேரடி தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் காவல்துறையிடம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், தேவையின்றி ட்விட்டரை இழுத்தது ஏன் என கண்டனம் தெரிவித்துள்ளது.