Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தீராத ஆசையால் 17 பிள்ளைகள் பெற்றெடுத்த தம்பதியினர்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (18:16 IST)
ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து குழந்தை பெற்றெடுத்து வந்த தம்பதியினருக்கு தற்போது 17 பிள்ளைகள் உள்ளனர்.

 

 
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பழங்குடி மாவட்டமான தஹோதியைச் சேர்ந்த ராம்சின், கனு சங்கோட் என்ற தம்பதியினர் 17 குழந்தைகளைப் பெற்றுள்ளனர். ஆண் பிள்ளை வேண்டும் என்ற ஆசையில் அடுத்தடுத்து தொடர்ந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
 
அவர்களுக்கு தொடர்ந்து பெண் குழந்தைகளே பிறந்துள்ளது. இறுதியாக 2013ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மீண்டும் ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து குடும்ப கட்டுப்பாடு செய்துக்கொள்ள ஆலோசனை கூறியுள்ளனர். 
 
16 பெண் குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் இறந்துவிட்டது. இந்த தம்பயினர் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். இருந்தும் இவர்களின் ஆண் பிள்ளை ஆசை தீரவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :