1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 21 மார்ச் 2020 (16:42 IST)

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 298 ஆக அதிகரிப்பு!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 298 ஆக அதிகரிப்பு!!!

சீனாவில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவில் உள்ள பல்வேரு நாடுகளுக்கும் பரவியுள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இத்தாலி, ஈரான், எகிப்து, இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட நாடுகளுக்கு மிக வேகமாகப் பரவியது. ஆனால், நேற்று, சீன அரசு, சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ணிக்கை  259 லிருந்து,  298ஆக உயர்வு இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு என  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  கொரோனா வைரளால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்த நிலையில்,நேற்று முன் தினம் இரவு நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, வரும் மார்ச் 22 ஆம் தேதி, அனைத்து மக்களும் ஊரடங்கு உத்தரவை மேற்கொள்ள வேண்டும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிட்டுள்ளது.