செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (19:28 IST)

கொரோனா தொற்று பரிசோதனையை கட்டணமில்லாமல் செய்ய வேண்டும் – சுப்ரீம் கோர்ட்!!!

கொரோனா தொற்று பரிசோதனையை கட்டணமில்லாமல் செய்ய வேண்டும் – சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

அதில், புதிதாக 773 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியாகியுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 5274 பேராக பாதிப்பட்ட்டுள்ளனர் எனவும், பலி எண்ணிக்கை 149 அதிகரித்துள்ள்ளது எனவும் 411 பேர் மீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், அரசு பல்வேறு நவவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று இலவச பரிசோதனை தொடர்பான அரசாணையை வெளியிட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாவது :

கொரோனா பரிசோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனையை மையங்களில் கட்டணமின்றி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.