1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:22 IST)

3 நாளில் குணமாகும் வகையில் கொரோனாவுக்கு புதிய மருந்து!!

பயோ சயின்ஸ் நிறுவனத்தின் புதிய மருந்தை செலுத்தினால், 3 நாளில் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம் என்று தகவல். 

 
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஐசெரா பயாலஜிக்கல் என்ற பயோ சயின்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. 
 
அதன் ஆரம்பகட்ட பரிசோதனை முடிவில் லேசான மற்றும் மிதமான கொரோனா அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால் அவர்கள் நோயில் இருந்து விரைவாக மீட்கப்படுவார்கள் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
 
அதன்படி லேசான மற்றும் மிதமான தொற்றி அறிகுறியுள்ள கொரோனா பாசிடிவ் நோயாளிகளுக்கு பயோ சயின்ஸ் நிறுவனத்தின் புதிய மருந்தை செலுத்தினால், 3 நாளில் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.