1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:34 IST)

1.6 கோடியை கடந்த இந்திய கொரோனா பாதிப்பு!!

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,545 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,06,25,428 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 163 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,53,032 ஆக உயர்ந்துள்ளது.
 
அதோடு தொற்றில் இருந்து ஒரே நாளில் 18,002 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,02,83,708 ஆக உயர்ந்துள்ளது.