கொரோனா தடுப்பூசி நிறுவனத்தில் ரூ.1000 கோடி இழப்பு !
இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்து வழங்கும் பொறுப்பேற்றுள்ள பிரபலமான சீரம் நிறுவனத்தில் தற்போது தீ விபத்து ஏற்பட்டது. இதில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீரம் நிறுவனத்தில் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து, மத்தியர அரசு கொரோனா கால ஊரடங்கை அறிவித்தது. ஏழு மாதங்களை கடந்த நிலையில் ஓரளவு தொற்றும் கொரோனா இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு கொரோனாவுக்கு தடுப்பூசி வழங்குவதாக அறிவித்த நிலையில், இந்தியாவில் பிரசித்தி பெற்ற சீரம் என்ற நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகள் பெறுவதாக அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் தற்போது புனே மாநிலத்தில் உள்ள சீரம் நிறிவனத்த்ல் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இப்போது தீ கட்டுக்குள்கொண்டுவரப்பட்டது. பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
ஆனால் இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தை முதல்வ்ர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டார். இதுகுறித்துப் பேசிய அவர், இது சதியால் ஏற்பட்டதா இல்லை விபத்தா என்று விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், சீரம் நிறுவனத்தின் தலைவர் அதர் பூனவல்லா இதுகுறித்துக் கூறும்போது, இந்த தீ விபத்தால் எங்களுகு ரூ. 1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தடுப்பூசி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் விபத்து நிகழவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்ட்டின் கொரோனா தடுப்பு மருந்தை கோவிஷீல்ட் என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.