அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம்: முதல்வர் எச்சரிக்கை
அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கேரளாவில் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டதை அடுத்து மாநிலத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்தது என்றும், பயணங்கள் அதிகரித்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து நோயின் தீவிரம் அடுத்த இரண்டு வாரத்தில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கூறியுள்ளார்
பொதுமக்கள் கவனத்துடன் இருந்தால் மட்டுமே கொரோனா தீவிரத்தை தடுக்க முடியும் என்றும் அக்டோபர் மாத இறுதியில் கொரோனா தொற்றின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கூறியிருப்பதாகவும் அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருப்பவர்கள் நிபந்தனைகளை மீறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதனால் தனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அடுத்த சில வாரங்களில் கொரோனாவின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது