செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 மார்ச் 2021 (08:05 IST)

மீண்டும் லாக்டவுன்?? என்ன முடிவு எடுக்கவுள்ளது மத்திய அரசு?

நாம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் சூழலில் இருக்கிறோம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாள் ஒன்றிற்கு 20 ஆயிரத்திற்கு அதிகமான பேருக்கு புதிதாக கொரொனா உறுதி செய்யப்படுகிறது. 
 
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 15 ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் சூழலில் இருக்கிறோம். 
 
நாக்பூர், புனே, தானே, மும்பை, பெங்களூரு, எர்ணாகுளம் ஆகியவை தொற்று அதிகமாக உள்ள நகரங்கள். கொரோனா தடுப்பு பணிகளில் வேகம் குறைந்ததும் மக்கள் அதிகளவில் பொது இடங்களில் கூடியதுமே தொற்று எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என தெரிவித்துள்ளனர்.