வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2021 (10:31 IST)

பெரிதும் குறைந்த கொரோனா - இந்திய நிலவரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது.  
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,92,746 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 103 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,55,550 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,395 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,06,00,625 ஆக உயர்ந்துள்ளது.