வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 மே 2021 (08:19 IST)

199 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைவு… மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 199 மாவட்டங்களில் குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பல மாநிலங்களில் மருத்துவ ஆக்ஸிஜன் இல்லாமை, படுக்கைகள் இல்லாமை மற்றும் கொரோனாவால் இறந்தவர்களை முறையாக நல்லடக்கம் செய்ய முடியாமல் ஆறுகளில் தூக்கி வீசுதல் போன்ற அதிர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு இரண்டு வாரங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 199 மாவட்டங்களில் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.