பெட்ரோல்,டீசல் அடுத்து சிலிண்டர் விலைக்கு வேட்டு - 48 ரூபாய் உயர்வு

gas
Last Updated: வெள்ளி, 1 ஜூன் 2018 (15:54 IST)
பெட்ரோல், டீசல் உயர்வை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள் தற்பொழுது சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது.
 
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றி வருகின்றனர். இதனால் வாக ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி விலையும் கனிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்பொழுது சமையல் சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது. 
பெட்ரோல், டீசல் விலை உயர்வையே தாங்க முடியாத மக்கள், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார்களோ?
 
அதன்படி மானியத்துடன் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 2.34 ரூபாயும், மானியமில்லாத சிலிண்டர் விலை 48 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :