செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 டிசம்பர் 2024 (13:52 IST)

எங்களுக்கு சொந்தமான தெலுங்கு பையன்.. குகேஷூக்கு வாழ்த்து தெரிவித்த சந்திரபாபு நாயுடு..!

சென்னையை சேர்ந்த குகேஷ், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றார். அவருடைய சாதனை தமிழக முதல்வர் உள்பட பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, "எங்களுக்கு சொந்தமான தெலுங்கு பையனுக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது எக்ஸ் தளத்தில், "எங்களுக்கு சொந்தமான தெலுங்கு பையன், இந்திய கிராண்ட் மாஸ்டராக சிங்கப்பூரில் 18 வயதில் உலகின் இளைய செஸ் சாம்பியன் என்ற வரலாற்றை படைத்துள்ளார். அவரது சாதனையை ஒட்டுமொத்த இந்திய தேசமும் கொண்டாடுகிறது. இன்னும் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

ஆந்திர முதல்வரின் இந்தப் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "சென்னையில் பிறந்த குகேஷை தெலுங்கு பையன் என்று கூறுவது சரியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. "நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரரை ஒரு இன அடிப்படையில் உரிமை கொண்டாடுவது எப்படி?" என்ற கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பதிவாகி வருகின்றன.


Edited by Siva