வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:39 IST)

முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சிறையில் படுக்கை வசதி செய்து கொடுப்போம்: காங்கிரஸ்

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் நிச்சயம் சிறை செல்வார் என்றும் அப்போது அவருக்கு படுக்கை வசதிகள் செய்து கொடுப்போம் என்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். 
 
தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பேசிய போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கண்டிப்பாக சந்திரசேகர் ராவ் தான் செய்த ஊழலுக்காக சிறாஇ செய்வார் என்றும் அப்போது அவருக்கு  சிறையில் படுக்கை வசதி செய்து கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
சந்திரசேகர் ராவ் பத்தாயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து வைத்துள்ளார் என்றும் அவர் மட்டுமின்றி அவரது மகன், மருமகள், மகள், மருமகன் ஆகிய அனைவரும் சிறைவுக்கு செல்வார்கள் என்றும் அனைவருக்கும் படுக்கை வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva