புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (10:48 IST)

காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து? எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர்கள் பந்தோபஸ்து!

தேர்தல் தோல்வியின் காரணமாக காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் மாநில அரசுகளுக்கு பாஜகவால் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 
 
மக்களவை தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாமல் தோல்வி அடைந்தது காங்கிரஸ். இதனால் மத்திய பிரதேசம் உள்ளிட்ட காங்கிரஸ் ஆட்ச்சி நடைபெறும் மாநில அரசுகளுக்கு ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. 
 
மத்திய பிரதேசத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர் கடும் அதிருப்தியில் உள்ளார்களாம். இந்த நேரத்தில் பாஜக அம்மாநில முதல்வர் கமல்நாத்தை பெரும்பான்மையை நிரூபிக்கும் படி கேட்டுள்ளனர். 
 
இதனால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறிவிடுவார்களோ என்ற பயத்தில் தனது அமைச்சரவையில் உள்ள 27 அமைச்சர்களை எம்.எல்.ஏ-க்களின் பாதுகாவலராக செயல்படுமாறு கமல்நாத் அறிவுறுத்தியுள்ளார்.