பாஜக இரட்டை என்ஜின் ஆட்சி நடத்துகிறது: பிரியங்கா விமர்சனம்
இந்தியாவில் பாஜக இரட்டை என்ஜின் ஆட்சியை நடத்துகிறாது என்றும் இந்த இரட்டை என்ஜின் ஆட்சியை தொடர கூடாது என்றும் வாக்காளர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருப்பதை அறிந்து அங்கு தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பிரியங்கா காந்தி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்
அப்போது அவர் பேசியபோது கடந்த 5 ஆண்டுகளாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் எந்த வளமும் இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன
எனவே பாரதிய ஜனதாவின் இரட்டை என்ஜின் ஆட்சி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீண்டும் அக்கட்சி ஆட்சிக்கு வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு அளித்தால் மக்கள் பின்னால் வருந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்
மேலும் காங்கிரஸ் கட்சி மட்டுமே மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறது என்றும் கடந்த காலங்களில் மேற்கொண்ட பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நடந்தால் இம்மாநிலம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
Edited by Siva