1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:24 IST)

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரளாவில் 1001 புதிய வீடுகள்; காங்கிரஸ் அறிவிப்பு

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1001 வீடுகள் கட்டித்தரப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கேரள மாநிலம் முழுவதும் கடுமையாக பாதித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான தங்களது உடமைகளை இழந்ததுடன் வீடுகளையும் பறிகொடுத்தனர்.
 
மாநிலத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் வெள்ளித்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1001 வீடுகள் கட்டித்தரப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 
ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வீடு என ரூ.5.05 கோடியில் 1001 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் தொண்டர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி பெரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.