Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கர்நாடகாவில் கூவத்தூர் பார்முலா; ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்படும் எம்.எல்.ஏ.க்கள்!

Last Updated: புதன், 16 மே 2018 (18:07 IST)
கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு சொகுசு பேருந்து கொண்டு செல்லப்படுகின்றனர். 
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்று முடிவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக 104 இடங்களை கைப்பற்றினாலும் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவைப்படுகின்றன. 
 
இதனால் 78 இடங்களை பிடித்த காங்கிரஸ், 37 இடங்களை பிடித்த மஜக கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் முடிவில் உள்ளது. ஆனால் பாஜக வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து பெரும்பான்மை நிரூபிக்க கால அவகாசம் கேட்டுள்ளார்.
 
அந்நிலையில், மஜக கட்சியின் முதல்வர் வேட்பாளர் குமாரசாமி, பாஜக தங்கள் பக்கம் எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.100 கோடி பேரம் பேசி வருவதாக குற்றம்சாட்டினார். அதேபோல், சித்தராமையா, கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்க பிரதமர் மோடி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
 
இந்நிலையில் கர்நாடாகாவில் கூவத்தூர் பார்முலாவை பின்பற்றியுள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பத்திரமாக சொகுசு பேருந்து மூலம் பெங்களூரில் உள்ள ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவும், குதிரை பேரத்தை தவிர்ப்பதற்காகவுமே சித்தராமய்யா தரப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

சசிகலா முதல்வராக முயன்றபோது கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை பல நாட்கள் தங்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :