புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (20:03 IST)

அரசு அதிகாரியை தாக்கி, களிமண் சேற்றை ஊற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ...

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாலையில் மோசமாயிருந்த இடத்தை ஆய்வு செய்ய வந்த அரசு பொறியாளரை காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கிய பாலத்தில் கட்டி வைத்த சம்பவம் நாடு முழுவதும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை - கோவா நெடுஞ்சாலையில் உள்ள கங்காவலி பகுதியை ஆய்வு செய்வதற்காக அரசு பொறியாளரான பிரகாஷ் ஷேடேகர் சென்றார். அங்கு சேதம் அடைந்திருந்த சாலையை காணச் சென்ற போது, அப்பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதிஸ் நாராயணன் என்பவர் தனது ஆதவாளர்களுடன் இணைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
 
ஆனால், பிரகாஷ் தன் ஆய்வு செவ்வனே செய்துகொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள், பிரகாஷ் சுற்றிவளைத்து களிமண்ணை நீரில் கரைத்து அந்த சேற்று தண்ணீரை எடுத்து அவர் மீது  ஊற்றி அவமானப்படுத்தினர். 

பின்னர் பிரகாஷை வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் மீது உள்ள பாலத்தின் மேலே கட்டிவைத்தனர். ஒரு அரசு அதிகாரியை அச்சமில்லாமல் தாக்கிய இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 
சமீபத்தில் மும்பையில் ஆகாஷ் என்ற எம்.எல்.ஏ ஒரு முனிசிபல் அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி சிறைக்குச்சென்றது குறிப்பிடத்தக்கது.