செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (17:08 IST)

காங்கிரஸ் எம்.பி.,யின் தனிநாடு கருத்து… மன்னிப்பு கேட்க வேண்டும்- பியூஸ் கோயல்

மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் பற்றி நேற்று  கருத்துக் கூறிய காங்கிரஸ் எம்.பி., எ,டி.கே.சுரேஷ்குமார் தனிநாடு கோர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.
 
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாட்டை பிளவுப்படுத்துவது தொடர்பாக  யார் பேசினாலும் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் பொருத்துக் கொள்ள மாட்டோம்…கன்னியாகுமர் முதல் காஷ்மீர் வரை நாம் ஒன்றுதான் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3 வது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், அப்போது பேசிய பாஜக  எம்.பி., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,டி.கே.சுரேஷ்குமார் தனிநாடு பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேணடும் என்று வலியுறுத்தியுள்ளார்.