வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 19 டிசம்பர் 2014 (12:31 IST)

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவில் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், மருத்துவ பரிசோதனைக்காக தொடர்ந்து அமெரிக்கா சென்று வந்தார்.
 
இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென சுவாசக்குழாய் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய்மக்கான் கூறுகையில், ''சோனியா காந்திக்கு சுவாசக் குழாய் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.