1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 மே 2023 (10:16 IST)

5 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தீவிரம்: கர்நாடகா போல் வெற்றி கிடைக்குமா?

Mallikarjun Kharge
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் அக்கட்சி கவனம் செலுத்த இருப்பதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  அதற்கு முன்பாக மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 
 
இந்த சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது? வெற்றியை எவ்வாறு பெறுவது? என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் கூடுகின்றனர். 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran