1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2023 (19:46 IST)

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் திட்டம்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரது பங்களாவை காலி செய்யுமாறு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்துக்கு 19 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா  அவர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வராது காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 
 
காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கே இன்று இந்த தகவலை அளித்துள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
Edited by Siva