புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (09:10 IST)

அரசு பேருந்தில் குழந்தை பெற்ற பெண்.. பிரசவம் பார்த்த பெண் கண்டக்டர்..!

ஓடும் அரசு பேருந்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு விட உடனடியாக அங்கிருந்த பெண் கண்டக்டர் பிரசவம் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் ரக்ஷா பந்தன் தினத்தை ஒட்டி தனது சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக தனது சொந்த ஊருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து நிலைமையை புரிந்து கொண்ட பெண் நடத்துனர் உடனடியாக பேருந்தில் பயணம் செய்த நர்ஸ் ஒருவருடன் இணைந்து பிரசவம் பார்த்தார். அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் இதனையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

பிரசவ வலி வந்தவுடன் உடனடியாக சமயோசிதமாக செயல்பட்ட பெண் நடத்துனர் பேருந்து நிறுத்தி தாய் குழந்தை என இரு உயிர்களை காப்பாற்ற உதவிய நிலையில் அந்த நடத்துனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva