வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (16:37 IST)

Fllpcard க்கு எதிராகக் குவியும் கண்டனம்---சுஷாந்த் ரசிகர்கள் கொந்தளிப்பு

SUSHANTH -FLIPCARD
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் பற்றி அவதூறு பரப்புவது போல் ஒரு டி-சர்ட் விளம்பரம் வெளியிட்ட ஃபிலிப்கார்டுக்கு எதிராக விமர்சனம் வலுத்து வருகிறது.

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும்    நடிகராக இருந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டடு ஜூன் 14 ஆம் தேதி  தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல ஆன்லைன் வர்த்தக  நிறுவனமான ஃபிலிப்கார்டில், ஒரு டீ சர்ட்டில்  நடிகர் சுஷாந்த் படம் பதிவிட்டு, அதில், டிப்ரஷன்( depression)  எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது சுஷாந்த் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மறைந்துபோன நடிகர் சுஷாந்தைப் பற்றி அவதூறு பரப்புவது மாதிரி இந்த விளம்பரம் இடம்பெற்றுள்ளதாகவும், அதனால், ஃபிலிப் கார்டை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில்  நெட்டிசன் கள் குறிப்பிட்டுள்ளனர்.