செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2024 (14:26 IST)

ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாக பயன்படுத்தினாரா அமைச்சர் சுரேஷ் கோபி? காவல்துறை வழக்குப்பதிவு..!

Suresh Gopi
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும், அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பதும் தெரிந்த விஷயமாகும்.
 
இந்த நிலையில், தேர்தலுக்கு முன்பான திருச்சூரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக, ஆம்புலன்ஸ் வாகனத்தில் சுரேஷ் கோபி வந்து இறங்கியதாக கூறப்படுகிறது. மருத்துவ அவசர பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்தியதாக இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை விசாரணை நடத்தி, அவர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தியதை உறுதி செய்துள்ளது.
 
இந்நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே ஆம்புலன்ஸை பயன்படுத்தினேன் என்று சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார். வழக்கின் விசாரணையின் முடிவில் என்ன தீர்வு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva