1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (05:40 IST)

பொது நுழைவுத் தேர்வு: மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்

பொது நுழைவுத் தேர்வு: மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்

மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும்  முயற்சியில் மத்திய அரசு மீண்டும் இறங்கி உள்ள செயலுக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
பாஜக அரசு நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும்  முயற்சியில் மீண்டும் இறங்கி உள்ளது.
 
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 2011 ஆம் ஆண்டு இது போன்ற பொது நுழைவுத் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்ட போது, கடும் எதிர்ப்பு எழுந்தது.
 
அது போல, கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உயர் நீதிமன்றமும், தமிழக அரசின் முடிவு சரியே என தீர்ப்பு வழங்கியது.
 
இந்த நிலையில் இந்திய மருத்துவக் கழகம் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிற அமைச்சகங்களின் கருத்துக்களை கேட்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
 
மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அலட்சியம் செய்து  மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த முயற்சி செயவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
 
எனவே, சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் இந்த திட்டம் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.