திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (08:50 IST)

ரூ.150 நாணயம் வெளியிட்ட பிரதமர்! ஏன் தெரியுமா??

புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.


புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளில் அவரை நினைவூட்டும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்று நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு பின்வருமாறு பேசினார்,

1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த ஸ்ரீ அரவிந்தர், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் நிலையான பங்களிப்பை அளித்தார். ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை 'ஏக் பாரத், ஷ்ரேஷ்ட பாரத்' ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும். அவர் வங்காளத்தில் பிறந்தாலும், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை குஜராத் மற்றும் புதுச்சேரியில் கழித்தார். எங்கு சென்றாலும் தனது ஆளுமையின் ஆழமான முத்திரையை பதித்தவர் என புகழாராம் கூட்டினார்.

இதற்கு முன்னதாக மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு 150 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். குரு கோவிந்த் சிங்கின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் 350 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டார். மேலும் இதே போல முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக 2018 ஆம் ஆண்டு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது கூடுதல் தகவல்.