பாத்ரூமில் குழந்தை பெற்று வாளியில் போட்டுவிட்டு ஓடிய கல்லூரி மாணவி!

Last Modified திங்கள், 2 மார்ச் 2020 (20:32 IST)
18 வயது கல்லூரி மாணவி ஒருவர் பாத்ரூமில் குழந்தை பெற்று அந்த குழந்தையை பாத்ரூமில் உள்ள வாளியில் போட்டுவிட்டு ஓடி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள துலே என்ற பகுதியில் பெண்கள் கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரிக்கு அருகில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி படித்து வரும் 18 வயது மாணவி ஒருவர் பாத்ரூமில் குழந்தை பெற்றுள்ளார். பின்னர் அந்த குழந்தை தன்னுடையது என தெரிந்தால் சிக்கலாகிவிடும் என்று கருதி அந்தக் குழந்தையை பாத்ரூமில் இருந்து வாளியில் போட்டு விட்டு ஓடிவிட்டார்

இந்த நிலையில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பாத்ரூமுக்கு வந்த விடுதி காப்பாளர் அங்கிருந்த வாளியில் பச்சிளம் குழந்தை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார்

போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு அந்த குழந்தை யாருடையது என விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது ஒரு மாணவி மீது போலீசாருக்கு சந்தேகம் வந்ததை அடுத்து அவரை மருத்துவ சோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்

மருத்துவ சோதனையில் குழந்தை அவருக்குத்தான் பிறந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் மாணவி மற்றும் குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த குழந்தை யாருக்கு பிறந்தது? குழந்தை பிறந்தவுடன் வாளியில் போட்டு விட்டு ஓடியது ஏன்? என்பது குறித்து போலீசார் அந்த மாணவியிடம் விரைவில் விசாரணை செய்ய உள்ளனர்
18 வயது கல்லூரி மாணவி ஒருவர் குழந்தையை பெற்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :