1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 3 மார்ச் 2017 (14:45 IST)

கோக், பெப்சி விற்பனை தடை ஜனநாயகத்திற்கு எதிரானது: உணவுத்துறை அமைச்சர்

தமிழகத்தில் கோக், பெப்சி குளிர்பான விற்பனையை தடை செய்தது நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானது என உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் போது பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களல் மக்களிடம் வலியுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விறபனை செய்ய போவதில்லை என வணிகர் சங்கத்தினர் தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் கோக். பெச்சி குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் கூறியதாவது:-
 
தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பனைக்கு வணிகர் சங்கத்தினர் தடை விதித்துள்ளனர். வணிகர் சங்கத்தினரின் இந்த முடிவு, நாட்டின் ஜனநாயக மாண்பிற்கு எதிரானது. தாங்கள் விரும்பும் உணவை சாப்பிட நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. இத்தகைய செயல்களால், கள்ளச் சந்தை வியாபாரங்கள் பெருகும். எனவே தமிழக வியாபாரிகள் செயல்களை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.