ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (07:47 IST)

கொச்சியில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

கொச்சியில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் அங்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து 53 நாட்களுக்கு பின்னர் கொச்சி மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ’ஜூலை 1 முதல் அதாவது இன்று முதல் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள சானிடைசர்களை அவ்வப்போது பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிய கொச்சி மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாகவும், அதற்கு பயணிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.