செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:29 IST)

தப்பியது முதல்வர் அசோக் கெலாட் அரசு: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

தப்பியது முதல்வர் அசோக் கெலாட் அரசு
கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த குழப்பத்திற்கு முடிவு காணப்பட்டுள்ளது 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சச்சின் பைலட் திடீரென தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து வெளியேறியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவர்களின் அரசுக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் இருந்தது
 
இந்த நிலையில் சமீபத்தில் சச்சின் பைலட்டுக்கும் அசோக் கெலாட்டுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து தற்போது காங்கிரஸ் ஆட்சி தப்பியுள்ளது. சற்று முன்னர் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது 
 
முரண்பட்டு நின்ற சச்சின்பைலட்டை டெல்லிக்கு வரவழைத்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சமரசம் செய்தார் என்பதும், ராகுல் காந்தியின் இந்த சமரச முயற்சிக்கு வெற்றி கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. சச்சின் பைலட்டின் அதிருப்தி குறித்து விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்தார். இதன் காரணமாக இன்று முதல்வர் அசோக் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது