வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2023 (13:14 IST)

பிரதமர் மோடியின் வருகையை புறக்கணித்த முதலமைச்சர்.. சிறப்பு வரவேற்பு கொடுத்த கவர்னர்..!

PM Modi
பிரதமரின் வருகையை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்கள் புறக்கணித்த நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பிரதமருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தார். 
 
பிரதமர் மோடி இன்று தெலுங்கானாவுக்கு வருகை தந்த நிலையில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்ளாமல் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார். தெலுங்கானாவில் ரூபாய் 11,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் 
 
ஹைதராபாத்தில் இந்த விழா நடைபெற்ற போது அவருடன் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார் என்பதும் இந்த விழாவுக்கு பிரதமர் மோடி வரும்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பு வரவேற்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் பிரதமர் மோடி இன்று செகந்திராபாத் - திருப்பதி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை ஆய்வை மேற்கொண்டு அதன் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் சந்திரசேகராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran