1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2019 (18:05 IST)

வகுப்பில் ’பாம்பு நடனம்’ ஆடிய ஆசிரியைகள்...வைரலாகும் வீடியோ

ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி வகுப்பின்போது பாம்பு நடனமாடிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சில நாட்களுக்கு முன் வகுப்பு நடந்து வந்தது.
 
இதில், ஏராளமான ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர். அப்போது, பயிற்சி வகுப்புக்கு இடையே இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு ஆசிரியை என 3 பேர் பாம்பு போல் வளைந்து நாசின் என்ற நடனம் ஆடியுள்ளனர்.

மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 
 
இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. இந்நிலையில், பயிற்சி வகுப்பின் போது, நடனமாடிய ஆசிரியர்களிடம், கல்வி உயர் அதிகாரிகள்   விளக்கம் கேட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.