1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (10:31 IST)

இந்தியாவில் இருந்து நடையை கட்டும் சிட்டி வங்கி !

அமெரிக்காவில் முன்னணி வங்கியாக திகழ்ந்து வரும் சிட்டி வங்கி இந்தியாவில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளது. 

 
ஆம், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், இந்தோனேஷியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்யா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேற சிட்டி பேங்க் முடிவெடுத்துள்ளது என முன்னரே அறிவித்திருந்தது. 
 
இப்போது சிட்டி பேங்க் முக்கியமான நாடுகளாகிய அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், லண்டன் ஆகியவைகளில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் பெரும் வளர்ச்சி இல்லாத நாடுகளில் இருந்து வெளியேற இருப்பதாகவும் அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.