Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜி.எஸ்.டி வரியால் குறைகிறது சினிமா டிக்கெட்டுக்கள்


sivalingam| Last Modified திங்கள், 12 ஜூன் 2017 (05:25 IST)
ஜி.எஸ்.டி வரிமுறைக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக 28% வரியை குறைக்காவிட்டால் சினிமாவில் இருந்தே விலகிவிடுவேன் என்று கமல் கூறியது குறிப்ப்பிடத்தக்கது.


 


இந்த நிலையில் சினிமாவுக்கான வரியில் தற்போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரூ.100-க்கும் அதிகம் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு 28% வரியும், அதற்கும் கீழே உள்ள டிக்கெட்டுகளுக்கு 18% வரியும் என்று விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரிமாற்றம் பெரும்பாலான தியேட்டர் அதிபர்களுக்கு பயன்படப்போவதில்லை என்றே கூறப்படுகிறது. ஏனெனில் பெரும்பாலான தியேட்டர்களில் தற்போதைய குறைந்தபட்ச கட்டணம் ரூ.120 என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா டிக்கெட்டுக்கள் தவிரை மேலும் 66 பொருட்களுக்கு இதேபோல் 28%ல் இருது 18% வரியாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :