வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (21:29 IST)

இத பண்ணலன டெபிட், கிரெடிட் கார்ட் பிளாக்

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இஎம்வி என்னும் சிப் விரைவில் பொருத்தப்படும் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. 
 
வங்கி டெபிட், கிரெடிட் அட்டைகளின் விவரங்களை திருடி பண மோசடி அதிக அளவில் நடந்து வருவதால் இதனை தடுக்க  இஎம்வி சிப் பொருத்திய அட்டைகளை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 
 
அதன்படி, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இஎம்வி சிப் பொருத்திய டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை வழங்க வேண்டும். 
 
இதனால், இஎம்வி சிப் பொருத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் வைத்துள்ளவர்கள், அதனை வங்கியில் கொடுத்து இஎம்வி சிப் பொருத்திய டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை பெற்று கொள்ளுமாறு வங்கிகள் குறுச்செய்தி அனுப்பி வருகின்றனர். 
 
மேலும், இஎம்வி சிப் பொருத்தாத அட்டைகள் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு முடக்கப்படும் என்றும் தெரிவிகப்பட்டுள்ளது.