1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2014 (15:16 IST)

அகமதாபாத் வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்தடைந்தார்.

அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை புரிந்துள்ளனர்.

ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தனி விமானத்தில் ஜின்பிங் வந்திறங்கினார்.

அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரை மாநில ஆளுநர் ஓ.பி.கோலி, முதலமைச்சர் ஆனந்தி பென் படேல், வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

முன்னதான இலங்கை சென்றிருந்த அவர் கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.