செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2016 (21:16 IST)

சீனா எச்சரிக்கை விடுத்தும் அசராத இந்தியா

மத்திய லடாக் பகுதியில் சீனா ராணுவ வீரர்களில் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இந்திய ராணூவ பொறியாளர்கள் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.


 

 
கடந்த புதன்கிழமை மத்திய லடாக்கில் உள்ள டெம்சொக்  கிராமப் பகுதியில் இந்திய ராணுவ பொறியாளர்கள் நீர்ப்பாசனக் குழாய்கள் நடும் பணியை மேற்கொண்டனர். அப்போது எல்லை கோடு பகுதிக்கு வந்த சீன ராணுவத்தினர், பொறியாளர்களின் பணியை தடுத்து நிறுத்தினர்.
 
கட்டுமானப் பணிக்கு இருதரப்பு ஒப்புதல் பெற வேண்டும் என சீன ராணுவத்தினர் எச்சரித்தனர். இதனை அறிந்த இந்திய பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இருநாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
 
பின்னர் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் வராதப்படி 70 ராணுவ வீரர்களை அரண் போல் நிறுத்தினர். இந்நிலையில் சீன வீரர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ராணுவ பொறியாளர்கள் பணியில் ஈடுப்பட்டு வெற்றிகரமாக பணியை நிறைவு செய்துள்ளனர்.