அப்புடிபோடு ; வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில் சென்னை 3வது இடம்
இந்தியாவில் உள்ள நகரங்களில் வாழ்வதற்கு அதிகமாக செலவாகும் நகரங்களில் சென்னை 3வது இடத்தை பெற்றுள்ளது.
நியூயார்க்கில் இருந்து செயல்படும் மெர்சர் எனும் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அதாவது, இந்தியாவிலேயே உள்ள மொத்த நகரங்களில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரம் வரிசைப்படி பட்டியலிடப்பட்டது. அதில் டெல்லி முதல் இடத்திலும், மும்பை 2வது இடத்திலும், ஆச்சர்யமாக சென்னை 3வது இடத்திலும் இருக்கிறது. அதேநேரம், இந்தியாவில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரமாக கருதப்பட்ட பெங்களூரு 22வது இடத்தில் இருக்கிறது
மனிதர்களுக்குத் தேவையான 200 அடிப்படை பொருட்களின் விலைகைளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
சென்னையில் ஆடைகள் மற்றும் செருப்புகளின் விலை அதிகாமாக இருப்பதாகவும், அதேசமயம் பால், காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை, டில்லி மற்றும் மும்பையை விட சென்னையில் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுவாரஸ்யமாக, மும்பையில் கிடைக்கும் மது பாட்டில்களின் விலையை விட, தமிழக டாஸ்மாக்கில் விற்கப்படும் மது பாட்டில்களின் விலை அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் எடுத்துக் கொண்டால் சென்னை 158வது இடத்திலும், பெங்களூரு 180வது இடத்திலும் இருக்கிறது.