வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 நவம்பர் 2014 (06:07 IST)

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வலியுறுத்தலை ஏற்றனர் கத்தோலிக்க மிஷனரிகள்

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியின் கத்தேலிக்க பள்ளிகளில் பள்ளியின் முதல்வர்களை ‘பாதர்’ என்றழைக்கும் வழக்கம் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக அப்பகுதி கத்தோலிக்க மிஷனரிகள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத் ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தியதை அடுத்து கத்தோலிக்க பள்ளிக்கூடங்களில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
 
கத்தேலிக்க பள்ளிகளில், பள்ளி முதல்வர் ‘பாதர்’ என்று இனி அழைக்கப்பட மாட்டார் என்றும், மாற்றாக பள்ளிமுதல்வருக்கான பொருள் கொண்ட ஹிந்தி வார்த்தையான ப்ராச்சார்ய அல்லது உப் ப்ராச்சாரிய அல்லது சார் என்று தான் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் எனிமேல் அனைத்து கத்தோலிக்க பள்ளிகளிலும் ஹிந்து கடவுளான சரஸ்வதி தேவி கடவுளின் ஒரு புகைப்படமாவது இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மூன்றாவதாக முக்கிய தலைவர்களின் புகைப்படங்களையும் பள்ளியில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என கத்தேலிக்க மிஷனரிகளின் சார்பில் பேசவல்லவரான ஏப்ரஹாம் கண்ணம்பலா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே சத்தீஸ்கர் மாநிலத்தில் ஹிந்து அல்லாத மற்ற மதக் கூட்டங்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடததக்கது.
 
ஆங்கிலத்தில் ‘பாதர்’ என்ற வார்த்தை ஒருவரின் தந்தயை அழைக்க உகந்த வார்த்தை என்றும், ஒருவரின் தந்தை அல்லாத எவரையும் தந்தை என்று அழைக்க கூடாது என்று சத்தீஸ்கர் மாநிலத்தின் ஹிந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்திருந்தது.
 
அத்துடன் கிறிஸ்தவ புனித நம்பிக்கையின் படி பாதர் என்ற சொல் ஹிந்து சமூகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக்கப்பட கூடாது என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.
 
மேலும் இது போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள், கல்வி என்ற காரணம் காட்டி இந்து மதத்தினரின் மீது ஜனநாயகம் அல்லாத அழுத்ததை விதிக்கின்றனர் என்று அம்மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்திருந்தது.
 
இந்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள பஸ்தர் பகுதி கத்தோலிக்க மிஷனரிகள், எதேனும் சமூகத்தை அல்லது மதத்தை தங்களின் சமூகம் காயப்படுத்தியிருந்தால், அதற்காக தாம் வருந்துவதாகவும், ‘பாதர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தச் சொல்லி தாம் எப்போதும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தியிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.