வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (07:36 IST)

இறுதிக்கட்டத்தில் சந்திரயான்-3 திட்டம்.. நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்..!

சமீபத்தில் சந்திராயன் 3 நிலவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது நிலவை நெருங்கி உள்ள விண்கலம் இன்னும் ஓரிரு நாளில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
சந்திராயன் திரை விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தரை இறங்குவதற்கான அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளும் தயாராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.  
 
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதையில் உலவி வரும் இந்த வெண்கலம் விக்ரம் லாண்டரை தரையிறக்கும் பணி இன்று நடைபெறும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
ஆகஸ்ட் 23ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்றும் அப்போது தன்னைத் தானே செல்பி எடுத்துக் கொண்டு பூமிக்கு அனுப்பும் என்றும் விஞ்ஞானி மயில்சாமி தெரிவித்துள்ளார்.  
 
விக்ரம் லாண்டார் பிரிந்த பின்னர் சந்திராயன் 3 திட்டத்தின் முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சந்திராயன் 3 திட்டமிட்டபடி சென்று கொண்டிருப்பதால் இந்திய விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது 
 
Edited by Siva