வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2019 (08:49 IST)

நிலவில் தரையிறங்கிய சந்திராயன் 2 – தொடர்பை இழந்தது இஸ்ரோ !

நிலவில் இறக்கப்பட இருந்த சந்திராயன் 2 விண்களத்தை நிலவில் இறக்கிய போது இஸ்ரோ சந்திராயன் 2 விடம் இருந்து தொடர்பை இழந்தது.

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் இன்று அதிகாலை 1.30 மணி  1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலாவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்திருந்தனர். இதைக் காண கர்நாடகாவுக்கு பிரதமர் மோடி வந்திருந்தார்.

ஆனால் நிலவின் தரைதளத்தைத் தொடும்போதே இஸ்ரோ தரை நிலையம் விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை இழந்தது. இந்நிலையில் லேண்டர் என்ன ஆனது என்ற விவரம் வெளியாகவில்லை. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் கே சிவன் ‘லேண்டர் விக்ரம் 2.1 கி.மீ உயரத்தை அடையும் வரை இயல்பாகவே சமிக்சைகளை அனுப்பி வந்தது. அதைத் தொடர்ந்து, லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு இழந்தது. இந்நிலையில் தொடர்பு இழந்ததற்கான காரணம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த சந்திராயன் 2 தரையிறக்கம் அனைத்து மக்களுக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.