வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 22 ஜூன் 2019 (10:00 IST)

நாயுடு வா கொக்கா... கட்சியினர் பாஜக பக்கம் தாவியதில் பக்கா ப்ளானிங்!!

தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு பின்னணியில் சந்திரபாபு நாயுடுவின் பக்கா ப்ளானிங் உள்ளதாம். 
 
நடைபெற்று முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்ள் சிலர் தங்களது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடுவிடம் கொடுத்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். 
ஆனால் இதர்கு பின்னர் சந்திரபாபு நாயுடுவின் மாஸ்டர் மைண்ட் உள்ளதாக அக்கட தேசத்து பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது, கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை செய்ய விரைவில் மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்பட்டது. 
 
எனவே பாஜக குறிவைத்திருந்த தனக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரியவர்களை அக்கட்சியிலேயே சேர்ந்துவிட சொல்லி சந்திரப்பாபு நாயுடுதான் கூறியதாகவும், இப்படி செய்ததன் மூலம் நம்பிக்கைகுரியவர்களை காப்பாற்றியதோடு தாமும் தப்பிவிட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.