வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (07:09 IST)

ஆந்திர தேர்தல் களம்.. ஜெகன் தனித்து போட்டி.. கூட்டணியுடன் களம் காணும் பாஜக.. யாருக்கு வெற்றி..!

ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதை அடுத்து பாஜக, சந்திரபாபு நாயுடு கட்சி மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆக இரண்டு கட்சிகளும் தனித்து களம் இறங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 88 இடங்கள் தேவை என்ற நிலையில் கடந்த 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

ஆனால் இந்த தேர்தலில்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும்  காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிடும் நிலையில்  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கியுள்ளதால் இந்த கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ள நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 144 தொகுதிகளிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 17 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

Edited by Siva