புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (18:08 IST)

திடீரென மயங்கிய பயணி; டாக்டராக மாறிய மத்திய அமைச்சர்! – நடுவானில் பரபரப்பு!

டெல்லியில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் பயணி மயங்கிய நிலையில் மத்திய அமைச்சர் மருத்துவ உதவி செய்துள்ளார்.

நேற்று டெல்லியிலிருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் பயணித்துள்ளார். அப்போது அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் மயங்கி விழவே பணிப்பெண் மருத்துவர் யாராவது இருந்தால் உதவிக்கு அழைத்துள்ளார்.

உடனடியாக அங்கு விரைந்த பகவத் காரத் உடனடி முதலுதவிகள் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த பயணி மயக்கம் தெளிந்து எழுந்துள்ளார். பகவத் காரத் மும்பையில் உள்ள கெ.இ.எம் மருத்துவமனையில் மருத்துவம் பயின்றவர் மற்றும் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை இண்டிகோ நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.