திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (09:30 IST)

ட்ரோன்களை கட்டுப்படுத்த தனி இயக்குநரகம்! – மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் சமீப காலங்களில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் ட்ரோன் பயன்பாடு மற்றும் கட்டுப்படுத்தலுக்கு புதிய இயக்குநரகம் அமைக்கப்பட உள்ளது.

தற்போது நாட்டில் திருமணம் முதற்கொண்டு பல்வேறு விழாக்களுக்கு ட்ரோன் கேமராக்கள் உபயோகிப்பதை தாண்டி, உளவு பார்ப்பது போன்ற அச்சுறுத்தலான பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில் வேகமாக அதிகரித்து வரும் ட்ரோன் பயன்பாட்டை அரசின் கட்டுக்குள் கொண்டுவர ட்ரோன்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒன்றை புதிதாக உருவாக்க சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டிஜிசிஏ உறுப்பினர்கள் எட்டு பேரை கொண்டு உருவாக்கப்படும் இந்த இயக்குநரகம் இந்தியாவில் ட்ரோன் பயிற்சி பள்ளிகளை அமைத்தல், ட்ரோன்களுக்கு சான்றிதழ் வழங்குதல், ட்ரோன் ஆபரேட்டருக்கு லைசென்ஸ் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. இதனால் அரசின் அனுமதி இன்றி ட்ரோன்களை பயன்படுத்துதல் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.